திருப்பதி கோவிலில் குவியும் பக்தர்கள்- 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
1 min read
Devotees throng Tirupati temple – wait 12 hours to have darshan
16/4/2025
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் வருவதால் அலிபிரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை திருப்பதியில் நிறுத்திவிட்டு அரசு பஸ்ஸில் வந்து செல்ல தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,543 பேர் தரிசனம் செய்தனர். 21,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.22 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.