July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியரை: காதலியை அரிவாளால் வெட்டிய காதலன் கைது

1 min read

Puliyarai: Boyfriend arrested for slashing girlfriend with machete

16/4/2025
தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள காதலித்துவிட்டு தன்னை வேண்டாம் என்று உதறிய காதலியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பல்வேறு பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் புளியரை போலீஸ்சரகம் கற்குடி பகுதியை சேர்ந்த இசக்கிதுரை என்பவரது மகன் திருமலைக்குமார் ( வயது 22). கூலித் தொழிலாளியான இவரும். வல்லம் பகுதியில் உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் புளியரை பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சென்று தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காதலி புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற தனது ஆசையை காதலனிடம் கூறியுள்ளார். காதலியின் ஆசையை நிறை வேற்ற காதலனும் தனது வயலை விற்று வீடு கட்டியுள்ளார். காதலியின் பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாமல், காதலி என்ன சொன்னாலும் அதை உடனடியாக செய்து அவரின் ஆசையை திருமலைக்குமார் நிறைவேற்றி வந்துள்ளார்.

மேலும் காதலிக்கு செல்போன், அவ்வப்போது செலவுக்கு பணமும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென திரும லைக்குமாரிடம் பேசுவதை காதலி தவிர்த்து வந்துள்ளார். அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காதலன் திருமலைக்குமார் அவரிடம் கேட்ட போது உன்னுடன் பழக எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த திருமலைக்குமார் அரிவாளுடன் காதலியின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.இதில் அவருக்கு தலை, கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து படுகாயமடைந்த காதலியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருமலைக்குமாரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் தன்னை தீவிரமாக காதலித்த காதலி திடீரென தன்னை வேண்டாம் என்று வெறுப்புடன் கூறியதால் ஆத்திரத்தில் காதலியை அரிவாளால் வெட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட திருமலை குமாரை நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.