July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியர்களுக்கு விசா சலுகைகளை வாரி வழங்கிய சீனா

1 min read

China offers visa concessions to Indians

17.4.2025
அமெரிக்காவுடன் மோதலுக்கு மத்தியில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை வழங்கிய சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது

சீன அரசு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 9-ந்தேதி வரை 85 ஆயிரம் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சீன தூதர் சூ பீஹோங்கின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, “ஏப்ரல் 9-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள சீன தூதரகங்கள் இந்த ஆண்டு சீனாவுக்குச் செல்லும் இந்திய குடிமக்களுக்கு 85,000-க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கி உள்ளன.

சீனாவைப் பார்வையிடவும், பாதுகாப்பான, துடிப்பான, நேர்மையான மற்றும் நட்பு சீனாவை அனுபவிக்கவும் அதிகமான இந்திய நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.

இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

மேலும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை சீனா தளர்த்தியுள்ளது. இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.

அதன்படி எந்த ஆன்லைன் முன்பதிவுகளும் இல்லாமல் வேலை நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். இந்தியர்களுக்கு விசா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் விண்ணப்பிக்கும் விசாக்கள் தற்போது மிக விரைவாக அங்கீகரிக்கப்படுகின்றன.

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரி விலக்கு அறிவித்தார். அதேவேளையில் சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.

இதனால் இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சீனா விசா சலுகைகளை அறிவித்துள்ளது. இது இந்தியா-சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. வரி விதிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.