கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: பத்திரியாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
1 min read
.DMK-BJP alliance should not be divided: Nayinar Nagendran appeals to journalists
17.4.2025
”அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வழக்கமாக ஏதாவது கேள்வி வைத்து இருப்பீர்கள். நானே சொல்லி விடுகிறேன். நீங்கள் கேட்கவே வேண்டாம். இந்த விவேக் சினிமா மாதிரி உங்கள் மனதில் என்ன இருக்கும் என்று எனக்கு தெரியும்.
அந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு இடம் கொடுக்காமல், எங்களுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கூட்டணி கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசி என்ன முடிவு எடுப்பார்களோ அது நடக்கும்.
தேவையில்லாமல் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உங்களுடைய சந்தேகங்களை கிளப்பி, பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டு விடுங்கள்.
யாரிடமும் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.