கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல் பூ அலங்காரம் – புதிய சர்ச்சை
1 min read
Flower decoration at Karunanidhi’s memorial resembling a temple tower – new controversy
17.4.2025
தமிழக சட்டசபையில் தற்போது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இன்று சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.
பொதுவாக ஒவ்வொரு மானியக் கோரிக்கையின்போதும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், தினமும் கருணாநிதி நினைவிடத்தில் பூ அலங்காரமும் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
“திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?” என்றும் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. இதற்கு அண்ணாமலை யும் கண்டனம் தெரிவித்துள்ளாார். ஆனால் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றாா.