பூலாங்குளத்தில் கவிஞர் மாயவநாதன் 90 வது பிறந்தநாள் விழா
1 min read
Poet Mayavanathan’s 90th birthday celebration in Poolangulam
17.4.2025
தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் கவிஞர் மாயவநாதன் 90 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சினிமாவில் பல்வேறு பாடல்களை எழுதி புகழ்பெற்றவர் மாயவநாதன். படித்தால் மட்டும் போதுமா படத்தில் “தண்ணிலவு தேனிரைக்க தாழைமடல் நீர்தெளிக்க கன்னிமகள் நடைபயின்று வந்தாள்-இளம்
காதலனைக் கண்டு நாணி நின்றாள்” என்ற பாடல் மூலமே பெரும் புகழை ஈட்டினார்.
மேலும் நித்தம் நித்தம் (பந்த பாசம்), தனக்கு தனக்கு (மகிழம்பூ). என்ன கொடுப்பாய் (தொழிலாளி), அந்தி வெயில் (பூம்புகார்). கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்), சித்திரப்பூவிழி வாசலிலே (இதயத்தில் நீ) உள்பட பல பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய அனைத்துப் பாடல்களும் பெரும் புகழ்பெற்றவை.
இவ்வளவு சிறப்பு மிக்கவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தை சேர்ந்தவர். தீவிரமான காளிபக்தர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர்.
படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார். அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.
“பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே – செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே” என்ற தத்துவப் பாடல் உணர்ச்சிமிக்கது.
1971-இல் மாயவநாதன் காலமானார்.
ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தில் நடைபெற்ற கவிஞர் மாயவநாதன் 90 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு பூலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் குணரத்தினம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அருள் ஆனந்த், ஜெகன் .வேதாள முத்து. வேல்முருகன் கணேஷ் ராஜா ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கவிஞர் மாயவனாதனின் மகன் செல்வ வேல் மாயவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கவிஞர் மாயவநாதனுடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது கவிஞர் மாயவநாதன் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழாவில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்துவதில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு பெருமை கொள்கிறது சினிமாவின் சித்தன் வணங்காமுடி கவிஞன் என்றும் அன்னை பத்ரகாளியின் பக்தன் என்றும் அனைவராலும் போற்றப்பட்ட கவிஞர் மாயவநாதன் அவர்கள் மிகச் சிறந்த காளி பக்தன் கரூர் சித்தர் கரம்பை சித்தர் போன்ற சித்தர்களிடத்திலே நட்பு வைத்துக் கொண்டவர் சந்திரகாந்தா நாடகக் குழுவின் மூலம் கலை உலகிற்கு அறிமுகமானவர் குறைந்த பாடல்கள் எழுதினாலும் நிறைவான கருத்துக்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர் காலத்தால் அழியாத காவிய பாடல்களை இலக்கிய வடிவில் கொடுத்த இலக்கிய கவிஞன் கவிஞர் மாயவநாதன் அவர்கள் இந்த பூலாங்குளம் மண்ணிலே பிறந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை தன் பாடல்களால் ஈர்த்தவர் பூலாங்குளம் என்ற
புண்ணிய பூமிக்கு பெருமை சேர்த்து சென்றவர் கவிஞர் மாயவநாதன் என்று புகழாரம் சூட்டினார்கள் மேலும் தமிழக முதல்வர் அவர்கள் கவிஞர் மாயவநாதனுக்கு பூலாங்குளத்தில் முழு திருவருவுச்சிலை அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட தலைவர் குருசாமி நாடார் மாவட்ட கல்வி குழு தலைவர் முப்புடாதி ராமர் பொதிகை மலர் உலகராஜ் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்