அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
1 min read
Rahul Gandhi to visit US next week
17.4.2025
காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகமான பிரவுன்பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.
வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வார் என்று அக்கட்சி தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ரோடே தீவு பகுதியில், இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.