அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி
1 min read
Shouldn’t a minister speak responsibly? – High Court questions Ponmudi
17.4.2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து,
இதற்கிடையே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? என்று கேள்வியெழுப்பிய ஐகோர்ட், பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.