July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கீழப்புலியூர் கொலையில் தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது

1 min read

4 people, including father and son, arrested in Keelapuliyur murder case

18.4.2025
தென்காசி அருகே கீழப்புலியூரில் பட்டப்பகலில் தலையை தண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் அதிர டியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்பு ரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36) இவர் தனது மனைவி தனலட்சுமியின் ஊரான தென்காசி அருகே கீழப்புலியூரில் குடும்பத்து டன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் கார்மென்ட்ஸ் நிறுவனம், நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் கீழப்புலியூர் பகுதியில் உள்ளரேஷன் கடைக்கு குத்தாலிங்கம், மனைவி தன லட்சுமியுடன் சென்றார். அப் போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், மனைவியின் கண் முன்னே குத்தாலிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரது தலையை துண்டித்துக் கொலை செய்து அவரது தலையை எடுத்து சென்ற கும்பல், காசிமேஜர்புரம் அம்மன் கோவில் முன்பாக வீசிச் சென்றது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கிளப்புலியூர் காசிமேஜர் வரும் பகுதியில் தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி மற்றும் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ம் தேதி காசிமேஜர்பு ரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அப்பகுதியைச் சேர்ந்த பட்டு ராஜா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக குத்தாலிங்கத்தின் தம்பியான இசக்கிமுத்து என்ற ஆனந்த், கணேசன் என்ற முனியா கணேசன் உள்ளிட்ட 5 பேரை போலீ சார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். எனவே பட்டுராஜா கொலைக்கு பழிக்குப்பழியாக அவருடைய உறவினர்கள் குத்தா லிங்கத்தை கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக பட்டுராஜாவின் உறவினர்களான காசிமேஜர்புரத்தைச் சேர்ந்த
கணேசன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 25) ராமையா என்பவரது மகன் செண்பகம்(வயது 43) மற்றும் அவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 24), குடியிருப்பு பகுதியைச் சார்ந்த ராஜு என்பவரது மகன் மணி (வயது 25) ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைதான ரமேஷ் , பட்டுராஜா மனைவியின் தம்பி ஆவார். அவர் காசிமேஜர்புரத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் ஆட்டு மந்தை யில் தூங்கியபோது நாய் குரைத்ததால் கண்விழித்தார். அப்போது அங்கிருந்து மர்மநபர் ஒருவர் ஓடினார்.

இந்நிலையில் குத்தாலிங்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆட்டை வெட்டுவது போன்ற படத்தை பதி விட்டு இருந்தார். எனவே குத்தாலிங்கத்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். என்று ராமசுப்பிரமணியன் கருதினார். இதுகுறித்து அவர் தனது சித்தப்பா செண்பகம், அவருடைய மகன் ஹரிகர சுதன் ஆகியோரிடம் கூறி னார்.

இதையடுத்து ராமசுப்பிரம ணியன், செண்பகம், ஹரிகரசுதன், நண்பரான மணி ஆகிய 4 பேரும் சேர்ந்து கீழப்புலியூருக்கு சென்று ரேஷன் கடையில் நின்று கொண்டிருந்த குத்தாலிங்கத்தை வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்பட்டிய நிலையில் குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து செய்தி அந்த பகுதி மக்களை சற்று அமைதிப்படுத்தி உளளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.