அ.தி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
1 min read
AIADMK: No one should comment on the alliance: Nainar Nagendran requests
18.4.2025
விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு அருகே நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைய வேண்டும் என்று கூறிவந்தது தற்போது நிறைவேறி இருக்கிறது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து பா.ஜ.க.வினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் எந்தக் கருத்தும் வெளியிட வேண்டாம். கூட்டணி விவகாரங்களை பா.ஜ.க. தலைமை பார்த்துக்கொள்ளும். ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் நமது ஒரே குறிக்கோள்.
இவ்வாறு அவர் பேசினார்.