குற்றாவளிக்கு ஆன்லைனில் கையெறிகுண்டு தயாரிக்க பயிற்சி; ராணுவ வீரர் கைது
1 min read
Army soldier arrested for training in grenade making online for criminals
18/4/2025
பஞ்சாப் மாநிலம் ஜலத்தினரில் யுடியூபர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் மர்ம நபர் கையெறி குண்டை (GRENADE) வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசிய மர்ம நபர் ஹர்திக் காம்போஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.
காம்போஜிடம் பஞ்சாப் போலீஸ் நடத்திய விசாரணையில் அவருக்கு GRENADE தயாரிக்க ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுக்சரண் சிங் என்பவர் ஆன்லைனில் பயிற்சி அளித்தது தெரியவந்தது.
காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராணுவ வீரர் சுக்சரண் சிங் பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பஞ்சாபில் சமீக காலமாக குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.