கல்லூரி மாணவர்கள் மோதல்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை
1 min read
College students clash: Chennai High Court makes recommendation to Tamil Nadu government
18.4.2025
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.
பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசுக்கு, சென்னை ஐகோர்டு இந்த ஆலோசனையை அளித்துள்ளது.
பல தலைவர்கள் படித்த இந்த புகழ்பெற்ற கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாகவும், குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்தார்.