“இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம்.” பிரதமர் மோடி பதிவு
1 min read
“We remember the sacrifice of Jesus Christ.” PM Modi’s post
18.4.2025
புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
புனித வெள்ளியன்று கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் இந்த நாள் நம்மைத் தூண்டுகிறது. புனித வெள்ளி என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் நாளாகும்.
புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம். இந்த நாள் கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் நம்மைத் தூண்டுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.