நிச்சயிக்கப்பட்ட பெண் வரதட்சணை மிரட்டல்; வருமானவரித்துறை அதிகாரி தற்கொலை
1 min read
Income Tax officer commits suicide after being threatened with dowry for a betrothed woman
குஜராத் மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் ஹரிராம் சத்யபிரகாஷ் பாண்டே (வயது 36). இவர் மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, ஹரி ராமிற்கு மோஹினி என்ற பெண்ணுடன் திருமன நிச்சியதார்த்தம் நடைபெற்றது. மோஹினிக்கு சுரேஷ் என்ற காதலன் இருந்துள்ளார். நிச்சயதார்த்தத்தின்போது மோஹினியும், சுரேசும் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதை கண்ட ஹரி ராம் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், சுரேசுடனான காதலை முறித்துக்கொண்டால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்றும் இல்லையென்றால் உன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும் மோஹினியிடம் ஹரி ராம் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது என்னை திருமணம் செய்துகொள்ளவில்லையென்றால் உன் மீதும் உன் குடும்பத்தின் மீதும் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் அளித்துவிடுவேன் என்று ஹரி ராமை மோஹினி மிரட்டியுள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஹரி ராம் நாசிக்கில் தான் தங்கி இருந்த வீட்டின் அறையில் நேற்று முன்தி்னம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.