அமெரிக்கா சென்றடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு
1 min read
Rahul Gandhi receives enthusiastic welcome upon arrival in the US
20.4.2025
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 21 மற்றும் 22-ம் தேதிகளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் ராகுல் காந்தி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திக்கிறார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின்போது டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.