பாகிஸ்தானில் இந்து மந்திரி மீது தாக்குதல்- நடவடிக்கை எடுக்கப்படும் என ஷெபாஸ் ஷெரீப் உறுதி
1 min read
Attack on Hindu minister in Pakistan – Shehbaz Sharif assures strict action will be taken
21/4/2025
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த கேல் தாஸ் கோகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை மந்திரியாக உள்ளார். இவர் தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அவருடைய காரின் மீது தாக்குதல் நடத்தினர். தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை கார் மீது வீசினர். இதில் மந்திரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மந்திரி மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.