மனைவி உஷாவுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வந்ததார்
1 min read
US Vice President J.D. Vance arrives in India with wife Usha
21.4.2025
அமெரிக்க அதிபர் ஜே.டி.வான்ஸ், 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா, 3 குழந்தைகள் ஆகியோருடன் வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் அவர்கள் வந்த விமானம் 9.45 மணிக்கு தரை இறங்கியது. அரசு சார்பில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதைதான், பரதநாட்டிய கலை நிகழ்ச்சியையும் வான்ஸ் தம்பதி கண்டு களித்தது.
துணை அதிபர் வான்சுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் 4 பேர் உடன் வந்துள்ளனர்.
டெல்லி விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் வான்சும், அவரது குடும்பத்தினரும் டெல்லியில் உள்ள நாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் வழிபாடுகள் செய்தனர்.
இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இன்று காலை அவர் நாராயண் ஆலயத்தில் வழிபாடு முடித்ததும் டெல்லியில் உள்ள பாரம்பரிய இந்திய கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்துக்கு சென்றார். அங்கு விற்கப்படும் பாரம்ப ரிய பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
இதையடுத்து டெல்லி மவுரியா நட்சத்திர ஓட்ட லுக்கு சென்று தங்கி ஓய்வு எடுத்தார். பிற்பகலில் அவரை இந்திய அதிகாரிகள் குழு சந்தித்து பேசியது.
நாளை(செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார்.
நாளை மறுநாள் (புதன்கிழமை) வான்சும், அமெரிக்க அதிகாரிகளும் ஆக்ராவுக்கு செல்ல உள்ளனர். அங்கு தாஜ்மகாலை துணை ஜனாதிபதி வான்சும், குடும்பத்தினரும் கண்டுகழிக்க உள்ளனர்.
மீண்டும் ஜெய்ப்பூருக்கு திரும்பும் வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார்.