போப் பிரான்சிஸின் நிறைவேறாத ஆசை
1 min read
Pope Francis’ unfulfilled wish
22.4.2025
இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை விட இந்தியாவில் அதிக கத்தோலிக்கர்கள் இருந்தாலும், 1999-ம் ஆண்டு முதல் நாட்டிற்கு போப் பாண்டவர் வருகை இல்லை.
1964-ம் ஆண்டு போப்பால் IV என்பவர் முதன்முறையாக இந்தியாவிற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து போப் ஜான் பால் II என்பவர் 1986 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி போப் பாண்டவர் ஜான் பால் ஆவார்.
மறைந்த போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வர வேண்டும் என்பதை தனது ஆசையாக கூறியுள்ளார்.
2017-ல் போப் பிரான்சிஸ் இந்திய வருகை ரத்தானது. அவர் வங்காளதேசம் மியான்மாருக்கு சென்றார்.
2025-ம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் அதற்கு முன்பே அவர் இந்தியா வந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வரவில்லை.
நம் நாட்டிற்கு வர வேண்டும் என்ற அவரது வாழ்நாள் ஆசை நிறைவேறாமல் அவர் காலமானார்.