தென்காசியில் திருநங்கைகள்தினம் -கலெக்டர் பங்கேற்பு
1 min read
Transgender Day in Tenkasi – Collector participates
22.4.2025
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான திருநங்கைகள் தினம் மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான திருநங்கைகள் தினம் மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர். தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா பிரியதர்ஷினி முன்னிலை வகித்து மகளிர் திட்டம் செயல்பாடுகள் மற்றும் திருநங்கைகள் தினம் பற்றி விளக்கி கூறினார்கள்.
திருநங்கைகளுக்கு சமையல் போட்டி, பேஷன் ஷோ போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் நடன போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் திருநங்கைகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும், கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
திருநங்கைகள் தலைவிகளுக்கு சால்வை அணிந்து கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்படும் திருநங்கைகள் குழு தலைவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டன. கிராமிய பாடல், கிராமிய கலை. சமூக நலனில் சிறப்பாக செயல்படும் திருநங்கைகளுக்கு பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொ) கவிதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் சுமதி. தாட்கோ மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் போட்டிகளின் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
மகளிர் திட்டம். மாவட்ட தொழில் மையம், தாட்கோ முன்னோடி வங்கி. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு திட்டங்கள் விளக்கி கூறப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி திட்ட அலுவலர்கள் அ. பிரபாகர், இ.சாமித்துரை. எம்.கலைச்செல்வி மற்றும் அ.முத்துப்பாண்டியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார இயக்க மேலாளர்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள். சமூக நலத்துறையை சேர்ந்த புஷ்பராஜ் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.