பஹல்காம் தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்
1 min read
Pahalgam attack: Rahul Gandhi consoles families of victims
23.4.2025
பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
“காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறாமல், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காது. அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள்.
கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசினேன். அங்குள்ள தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நம்முடைய முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவோம்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.