சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
1 min read
Tamil Nadu government approves Chennai Airport-Glamappakkam Metro Rail project
23.4.2025
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இதற்கான நிதிப்பரிவுக்காக திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.