திருப்பதி கோவில் மலை அடிவாரத்தில் தீவிர சோதனை
1 min read
Intensive search at the foot of the Tirupati temple hill
24.4.2025
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்தினம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த ஜனவரி 20-ந் தேதி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முட்டை பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் திருப்பதி மலைக்கு கொண்டு செல்லப்பட்டன
மார்ச் மாதத்தில் அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர். ஏப்ரல் 10-ந் தேதி தடையை மீறி கோவிலுக்கு அருகில் டிரோன் ஒன்று பறந்தது.
இது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திருப்பதி எம்.பி. புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இதன் காரணமாகவும் திருப்பதி கோவிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கைத் விடுத்துள்ளது.
கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அலிபிரியில் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலிபிரி சோதனை சாவடியில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் ஆர்ச் வரை காத்துக் நின்றன. போதிய அளவு வாகன சோதனை செய்யும் பாதுகாப்பு படையினர் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதியில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்களிள் வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.