July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை பாகிஸ்தான் உத்தரவு

1 min read

Pakistan orders missile test in Karachi coastal area

24.4.2025
ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி – வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.