டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ‘கேக்’?
1 min read
The ‘cake’ brought to the Pakistani embassy in Delhi for the celebration?
24.4.2025
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஊழியர் ஒருவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக் கொண்டு சென்றார். 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கொண்டாட இந்த கேக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பாகிஸ்தான் தூதரக ஊழியர் மவுனம் சாதித்தார்.
சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வேதனை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக்குடன் கொண்டாடுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் தூதரக அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்றனர். தூதரகம் அருகே இருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினார்கள்.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் அருகே நேற்று பா.ஜ.க.வினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.