காஷ்மீர் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை
1 min read
Kashmir encounter: Top Lashkar-e-Taiba commander shot dead
25.4.2025
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் லாலி என்பது தெரியவந்துள்ளது. இந்த என்கவுன்டரை அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.