தென்காசியில் ஓய்வூதியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Pensioners’ Grievance Redressal Day meeting in Tenkasi
25.4.2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஓய்வூதிய இயக்குநரக கூடுதல் இயக்குநர் (மின் ஆளுமை) டாக்டர்.அநிருபா ராணி, கணக்கு அலுவலர் கு.அருள் மற்றும் கருவூல கணக்கு இயக்குநரக (ஓய்வூதிய பிரிவு) கண்காணிப்பாளர் வீ.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட 15 முன்னோடி மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விபரம் ஓய்வூதியதார்களுக்கு நேரிடையாக தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒரு மனு புதிதாக பெறப்பட்டு மேல்நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், சென்னை மாநிலக் கணக்காயர் அலுவலக, துணை மாநில கணக்காயர் விஜயா. முதுநிலை கணக்கு அலுவலர் எஸ்.குப்புசாமி. முதுநிலை கணக்கர் வி.கோகுல கிருஷ்ணன், உதவி கணக்கு அலுவலர்கள் எஸ்.ஸ்ரீப்ரியா. ஏ.நிர்மலா, மற்றும் ஏ.மணிகண்டன் தென்காசி மாவட்ட கருவூல அலுவலர் குதவமணி ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அ.எபனேசர், மற்றும் மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.