June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

1 min read

Police threaten vice-chancellors: Governor alleges

25/4/2025
”மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்” என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, கவர்னர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும்.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.