டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரி கைது -சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
1 min read
Income Tax officer arrested in Delhi – CBI takes action
26/4/2025
டெல்லியில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் விஜேந்திரா. இவர், தினேஷ் குமார் அகர்வால் என்ற அக்கவுண்ட்டன்டுடன் சேர்ந்து, நிலுவையில் இருக்கும் உயர் மதிப்புள்ள வருமான வரி மதிப்பீட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதாக கூறி அதிக அளவில் லஞ்சம் பெற்று வந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. விசாரணையை தொடர்ந்து விஜேந்திரா மற்றும் தினேஷ் குமார் அகர்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.