ஆலங்குளம்: மாந்தோப்பில் 100 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கல்
1 min read
100 kg of tobacco products seized in Manthope One arrested – bike seized
27.4.2025
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்தும், மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களின் மூலம் கடைக்கு சீல் வைக்கப்பட்டும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயமான்குறிச்சி பகுதியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் அறிவுரையின்படி சார்பு ஆய்வாளர் சத்திய வேந்தன் தலைமையிலான காவல்துறையினர் மாயமான் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மாந்தோப்பில் உள்ள குடோனில் புகையிலைப் பொருட்களை பெரிதளவு பதுக்கி வைத்து அவற்றை தேவைக்கேற்ப இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்த குருவன் கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 41 என்ற நபரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 100 கிலோ எடை கொண்ட 70,000/- ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.