June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு சென்ற ரஜினி

1 min read

Rajinikanth visits S.P. Velumani’s house

29.4.2025
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதியினருக்கு மகா அவதார் பாபாஜியின் புகைப்படத்தை வழங்கி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி கோவையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார்.
ஆனால் படப்பிடிப்பு காரணமாக ரஜினிகாந்தால் திருமணத்தை பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் , இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்று மகன் விகாஸ்- தீக்ஷனா தம்பதிக்கு ரஜினி வாழ்த்துக்களை தெரிவித்தார் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.