July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

உலகின் அதிக வயதான பெண் மரணம்

1 min read

World’s oldest woman dies

2.5.2025
உலகின் அதிக வயதான பெண் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இனாஹ் கனாபாரோ லுகாஸ் என்பவர் கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு வாழ்ந்து வந்த இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார்.

கடந்த 30-ந் தேதி இனாஹ் கனாபாரோ உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இனாஹ் கனாபாரோ மறைவுக்குப் பிறகு, உலகின் அதிக வயதான பெண் என்ற பட்டம், இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.