14 வயது மாணவனால் டியூஷன் ஆசிரியை கர்ப்பம்
1 min read
23-year-old tutor gets pregnant by 14-year-old student in Gujarat
3.5.2025
குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய போலீசார், “தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.