பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் தடை
1 min read
Indian government bans imports from Pakistan
3.5.2025
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருட்களை யும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக்கூடாது என்று வர்த்தக அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த ஒரு பொருட்களையும் இறக்குமதி செய்வதையோ அல்லது கொண்டு செல்வதையோ தடை செய்யும் வகையில் விதி சேர்க்கப்பட்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தப்பட்டு உள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது கொள்கையின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்க்பபட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த தடைக்கு எந்தவொரு விலக்குக்கும் இந்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.