தமிழகத்தில் பாஜக வெற்றிபெற ஆலோசனை வழங்கிய நட்டா
1 min read
Nadda gave advice for BJP’s victory in Tamil Nadu
3.4.2025
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை சென்னைக்கு வருகைபுரிந்த பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் தமிழக பாஜகவின் சிறப்பு மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மற்ற மூத்த தேசிய, மாநிலத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஜேபி நட்டா, தமிழகத்தில் நமது கட்சியை மேலும் பலப்படுத்துவது, வரும் சட்டமன்ற தேர்தலில் அயராது களப்பணியாற்றி, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவது, அதிக அளவில் பாஜக-வின் வெற்றி வேட்பாளர்களைத் தமிழக சட்டமன்றத்திற்குள் அனுப்புவது என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
அவரது ஆலோசனைகளின்படி நமது பாஜகவின் தலைவர்களும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என உறுதி ஏற்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .