இந்திய விமானங்கள் துல்லிய தாக்குதல் நடத்தும் என்ற பயத்தில் பயங்கரவாதிகள் ஓட்டம்
1 min read
Terrorists flee fearing precision strikes by Indian jets
4.5.2025
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி ராணுவ தளபதிகளுடனும், பா.ஜ.க. மூத்த தலைவர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்கு ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 9 நாட்களாக பதட்டம் நீடித்தப்படி உள்ளது.
இதற்கிடையே இந்திய போர் விமானங்கள் அரபிக் கடலில் போர் பயிற்சி செய்தன. அதுபோல பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இதை அறிந்த பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து உள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் பல நவீன முகாம்களும் வைத்துள்ளனர்.
அந்த முகாம்கள் மூலம் எல்லையில் ஆயுத பயிற்சிகள் பெற்று தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அந்த முகாம்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத் துக்குள் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் துல்லிய தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி பயங்கரவாதிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலான பயங்கரவாத முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு பயங்கரவாதிகள் ஓட் டம் பிடித்து வருகிறார்கள். இந்த தகவல்களையும் இந்திய உளவுத்துறை சேகரித்து பயங்கரவாதிகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே ஜம்மு டிவிசன் பகுதியில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்து இருந் னர். அந்த முகாம்களில் 120-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்தனர். அந்த முகாம்களை மூடி விட்டு பயங்கரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் படம் பிடித்துள்ளது.