தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
1 min read
Petition seeking implementation of National Education Policy in Tamil Nadu dismissed
தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜெ.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன், மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளது.