July 7, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் பன்யன் அல்-மர்சூஸ்

1 min read

Operation Banyan Al-Marzoos against India Pakistani media press release

10.5.2025
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor)” என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் முக்கிய பயங்கரவாத குழுவின் தளபதி கொல்லப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்தியா முறியடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவுமுன்தினம் முதன்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஃபட்டா-1 மற்றும் ஃபட்டா-2 ஆகிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை வைத்துள்ளது. இந்த இரண்டு ஏவுகணைகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த பாகிஸ்தான் நாட்டின் உள்தயாரிப்பு ஏவுகணையாகும்.

நேற்று பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி டெல்லியை தாக்க முயற்சித்துள்ளது. இதை இந்தியா வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தாக்குதல் மூலம் பாகிஸ்தான் “ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்” நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பன்யன் அல்-மர்சூஸ் (Bunyan al-Marsoos) அல்லது பன்யன் அல் மர்சூஸ் (Bunyan Ul Marsoos) அல்லது பன்யன்-அன்-மர்சூஸ் (Bunyan-un-Marsoos) அல்லது பன்யனுன் மர்சூஸ் (Bunyanun Marsoos) என அழைக்கப்படுகிறது.

இதற்கு ஈயத்தால் ஆன சுவர் என்பது பொருள் எனவும், கட்டிடம் போல் தனது பாதையில் அணிவகுப்பது என்பது போல் பொருள்படும் எனவும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இந்தப் பெயருடன் பாகிஸ்தான் தன்னை ஒரு அசைக்க முடியாத சுவராகவோ அல்லது கட்டமைப்பாகவோ சித்தரிக்க விரும்புகிறது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பட்டா-2 ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். ஈது 400 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன்கொண்டது. எதிரி நாடுகளின் மிகவும் உள்பகுதிகள், ராணுவ தளங்கள், தகவல்தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை தாக்கக்கூடியதாகும்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் ‘திலகம்’ எனப் பொருள். அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர்.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.