14 ஆண்டுகளுக்கு முன்பு போப் லியோ தமிழக பள்ளிக்கு வருகை
1 min read
Pope Leo visited a Tamil Nadu school 14 years ago
10.5.2025
இந்த வாக்கெடுப்பின் முடிவில் வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் கத்தோலிக்கர்களின் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர்.
இதையடுத்து போப் லியோவுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் 14-ம் லியோ அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், போப் லியா சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியாராக இருந்தபோது தமிழகத்தில் உள்ள பள்ளிக்கு வருகை தந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆலுவாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் புனித அகஸ்டின் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாதிரியார் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்(போப் லியோ), கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்திருந்தார்.
தனது பயணத்தின்போது பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள அகஸ்தீனிய பாதிரியார்களின் புனித மோனிகா சமூக மடத்திற்கு அவர் சென்றிருந்தார். மடத்தின் பாதிரியார்களுடன் ஒரு கூட்டுப் பிரார்த்தனையை நடத்திய அவர், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியாவில் உள்ள அகஸ்தீனிய சபையின் பிராந்திய தலைவரான பாதிரியார் வில்சன், பொள்ளாச்சியில் உள்ள பள்ளிக்கு போப் லியோ வருகை தந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். போப் லியோ மிகவும் அன்பான மற்றும் பணிவான மனிதர் என்றும், தனது வருகையின்போது மாணவர்களுக்கு அவர் மிகுந்த ஊக்கமளித்தார் என்றும் பாதிரியார் வில்சன் கூறினார்.
.