பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு
1 min read
Army soldier killed in Pakistani drone attack
11.5.2025
இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்தும் விதமாக நேற்று சண்டையை நிறுத்தும் இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விமானப்படை நிலையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்திய இராணுவமும் பாதுகாப்பு அமைப்பும் டிரோனை வானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்த நேரத்தில், விமானப்படை நிலையத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலால் வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் பெயர் சுரேந்திர சிங் மோகா. 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவை சேர்ந்தவர். தற்போது உதம்பூர் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியில் இருந்தார். அங்கு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோனை நடுவானில் வெற்றிகரமாக அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இடிபாடுகளில் டிரோன் தாக்குதல் ஏற்படுத்திய இடிபாடுகளுக்குள் சிக்கி சுரேந்திர சிங் மோகா பலத்த காயமடைந்த நிலையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.