இந்திய எல்லை பகுதியில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறப்பு
1 min read
Opening of 32 closed airports in the Indian border area
12.5.2025
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 32 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது. இதில், சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், தரம்சாலா, பதிண்டா, ஜோத்பூர், ஜாம் நகர், பூஜ், ஆதம்பூர், அம்பாலா, ஹல்வாரா, ஹிண்டன் காசியாபாத், கண்ட்லா, கங்ரா, கேசோட், குலுமணாலி, முந்த்ரா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.