“அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சி”-மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
“AIADMK is trying to protect the tent containing the culprit” – MK Stalin’s post
13/5/2-025
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.
இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது என தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என பதிவிட்டுள்ளார்.