தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
1 min read
Continuous complaint: DMK woman councilor suspended from the party
21.5.2025
சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா. இவர், இந்த மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் அவர், தி.மு.க.வில் இருந்து இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கவுன்சிலர் சாரதா, சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.