கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா சென்றது
1 min read
A delegation of MPs led by Kanimozhi MP went to Russia
22.5.2025
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த குழுவில், சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி. ராஜீவ் ராய், பா.ஜ.க. கட்சியை சார்ந்த எம்.பி. கேப்டன் பிரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி. பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.