செங்கோட்டையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
1 min read
Alumni meet at Senkootai
22/5/2025
தென்காசி மாவட்டம்
செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள்
23 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்ற சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர்சங்கரன்கோவில்
வளர்மதி அனைவரையும் வரவேற்று பேசினார்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தற்போது ஆசிரியர்களாக பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் தண்டபாணி முருகன் மற்றும் 1995 – 2002 வரை படித்த 50 மாணவர்கள் தற்போது வெளி மாநிலத்தில் வெளி உள்ளவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் செங்கோட்டை நூலகர் கோ.ராமசாமி மற்றும் செங்கோட்டையில் உள்ள முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர் முடிவில் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் கோமதிநாயகம் அனைவருக்கும் நன்றி உரையாற்றினார் நிகழ்ச்சியில் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது மதிய உணவு விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .