தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி விவரத்தை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
High Court orders Central Government to submit details of funds allocated to Tamil Nadu
22.5.2025
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் “2021 முதல் 2023 கல்வியாண்டு வரை எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. முழு நிதியையும் மாநில அரசே செலுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. கூட இல்ல்லை என்பதால் ஒதுக்கவில்லை.
மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேரக்கை இதுவரை தொடங்கவில்லை” என வாதம் முன் வைக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு சார்பில் “சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கக்பபடவில்லை” பதில் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பிய நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.