காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
1 min read
Karnataka ordered to release water from Cauvery to Tamil Nadu
22.5.2025
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு திறந்துவிட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.