தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இல்லை
1 min read
No change in school opening date in Tamil Nadu
22.5.2025
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.” என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வருவதால் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்