குற்றாலத்தில் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் எதுவும் நடைபெறவில்லை- எம்.எல்.ஏ. பேட்டி
1 min read
No work has been done despite allocation of Rs 11 crore in Courtallam – MLA interview
22.5.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி, சித்திர சபை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுலா தளத்திற்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகளாக வேலைகள் நடை பெறவில்லை. வேலை நடக்காத காரணத்தால் ஆங்காங்கே பெயர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது.
பெண்கள் உடை மாற்றும் வசதி இல்லாமலும், ஒதுங்குவதற்கு இடமில்லாமலும் வண்டிகள் விடுவதற்கு இடப்பற்றாக் குறையும் காணப்படுகிறது. தற்போது 2 நாட்களாக தண்ணீர் விழுந்து பொது மக்கள் குளித்து குற்றாலநாதரை வணங்கி செல்லும் நிலையில் இந்த இடத்தை சீர் செய்வதற்கு ஒதுக்கிய பணத்திலும் வேலை நடைபெறவில்லை.
நடக்கின்ற வேலைகளிலும் தரம் இல்லை. இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த குற்றாலத்தை எல்லோரும் சந்தோஷமாக குளித்துச் செல்லும் அளவிற்கு, தென்காசி வரும் மக்கள் குற்றாலம் சென்றோம் அருமையாக இருக்கிறது என்று சொல்லும் வகையில் ஒரு வாய்ப்பை மாவட்ட நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நாங்கள் பல தடவை மெயின் அருவி வளைவை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினோம். மாற்றி அமைப்பதற்கு முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நடவடிக்கை எடுத்து குற்றாலத்தை சீர்மிகு குற்றாலமாக மாற்றி தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10-15 ஆண்டுகளாக எந்த முறையில் குற்றாலம் இருந்ததோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறது. எந்த இட வசதிகளும், மக்கள் வந்து போவதற்கு சௌகர்யமான இட வசதிகள் செய்து கொடுக்கப்பட
வில்லை. மழையில் அடித்துச் சென்று ஒடிந்த கம்பிகள் அப்படியே கிடக்கின்றது.
சாரல் மழை ஆரம்பித்து விட்டது. இதுவரை வேலை நடை பெறவில்லை மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்
கள். அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை கவனித்து மாவட்ட நிர்வாகம் சீர் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். பேட்டியின் போது தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன்,வட்டாரத் தலைவர் குற்றாலம் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.