July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

வாங்கிய கடனுக்கு வட்டியை கழிக்க செக்ஸ் விருந்து

1 min read

Sex party to pay off interest on debt

22.5.2025
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சுகுமார் (42) இவர் பைனான்சிஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜி நகரை சேர்ந்த துர்க்கை ராஜ் 45. சுகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி ராணி சித்ரா 40 என்பவர் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தார். அவரிடம் பணம் நிறைய இருப்பதை பார்த்து அதனை அபகரிக்க முடிவு செய்தார். அதன்படி அடிக்கடி ராணி சித்ராவின் வீட்டிற்கு சுகுமாரை வரவழைத்து அங்கு மது குடித்து உல்லாசமாக இருப்பது வழக்கமாம். அந்தவகையில் வாங்கிய கடனுக்கு வட்டியை கழிக்க பைனான்சியருக்கு ராணி சித்ரா செக்ஸ் விருந்து அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக உல்லாசமாக இருந்தனர். இதனை நாரயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சுகுமாரிடம் காட்டி ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை உங்கள் குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்தியதில் ராணி சித்ரா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பணம் கேட்டு மிரட்டியது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் இவர்கள் இதேபோல வேறு சிலரிடம் மது குடிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ராணிசித்ரா நிலக்கோட்டை சிறையிலும், துர்க்கைராஜ், நாராயணசாமி ஆகியோர் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.