“பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்..”- சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
1 min read
“We should have attacked Pakistan more..” – Subramanian Swamy interview
22.5.2025
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் “இன்னும் அதிகமாகத் தாக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பஹல்காமில் படுகொலையை ஏற்பாடு செய்ததன் மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் “நமது நாகரிகத்தின் வரலாற்றில்” மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அனுப்பப்படுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்தப் பிரதிநிதிகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உறுப்பினர்கள் தங்கள் பொழுதை கழிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.